Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2023 23:29:56 Hours

11 வது (தொ) கஜபா படையினர் நட்பு ரீதியான கரப்பந்து போட்டியில் வெற்றி

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 66 வது காலாட் படைப்பிரிவின் 663 வது காலாட் பிரிகேடின் 11 வது (தொ) கஜபா படையணி கரப்பந்து வீரர்கள் தொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவனம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) அப்பகுதியில் உள்ள படையினர் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இடையே தோழமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் வீரர்களுடன் நட்பு ரீதியிலான கரப்பந்து போட்டியை ஏற்பாடு செய்தனர்.

இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடியதுடன் 11 வது (தொ) கஜபா படையணியில் உள்ள வீரர்கள் மூன்றில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப்பை பெற்றனர். பின்னர், இரு அணிகளும், போட்டியின் உற்சாகத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரே நாளில் மேலும் பல போட்டிகளில் விளையாடின.66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் ஜயவர்தன, 663 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சுனீத தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டலின் பேரில் 11 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூபீடி பெரேரா அவர்கள் நட்புரீதியான போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இந்த திட்டத்திற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள் தனது ஆசிகளை வழங்கினார்.தொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலையத்தின் தலைமைப் பாதிரியார் மற்றும் பயிற்சிப் பணியாளர்கள், 11 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் அந்த நட்புரீதியான போட்டிகளைக் கண்டுகளித்தனர்.