26th April 2023 18:50:48 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 66 வது படைப்பிரிவின் 663 வது காலாட் பிரிகேட்டின் 11 வது (தொ) கஜபா படையணியின் 29 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) படையினரால் கிளிநொச்சி டொன் போஸ்கோ பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அதனோடு முகாம் வளாகத்தில் புதிதாக படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் (ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் பிளாண்ட்) திறந்துவைக்கப்பட்டது.
11 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூபிடி பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 66 வது காலாட் படைபிரிவின் தளபதி மற்றும் 663 காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் ஆண்டு நிகழ்வின் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆண்டு நிறைவு நாளில் (ஏப்ரல் 21) இராணுவ சம்பிரதாயங்களுக்குப் பின்னர் , 11 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி,அப்பகுதியில் உள்ள படையினர் மற்றும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.