11th June 2024 21:10:14 Hours
2024 மே 27 முதல் 2024 ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் இடம்பெற்றது. அதற்கமைய களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இராணுவம் மற்றும் உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, பிராந்தியத்தில் டெங்கு பரவுவதைத் தடுக்கும் வகையில் 2024 மே 30 முதல், 2024 ஜூன் 01 வரை நடைபெற்றது.