05th December 2024 21:58:20 Hours
11 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் மனுசத் தெரண மற்றும் பாலடிவத்த டயலோக் நிறுவனத்துடன் இணைந்து உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை 1 டிசம்பர் 2024 அன்று வெல்லாவெளி பிரதேச செயலக அலுவலகத்தில் நடாத்தியது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 243 வது காலாட் பிரிகேட் தளபதி கலந்து கொண்டார். 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மனுசத் தெரண மற்றும் டயலொக் ஆக்சியாட்டா ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.