03rd December 2023 21:32:51 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் படையினருக்கு தமது தலைமையகத்தில் புதன்கிழமை (நவம்பர் 22) 'மா சொயன மம' (நான் தேடும் நான்) என்ற கருப்பொருளில் உளவியல் செயலமர்வு நடாத்தப்பட்டது.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் படைப்பிரிவில் பணிபுரியும் படையினரின் நலனுக்காக இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
கண்டி உளவியல் ஆலோசனை சங்கத்தின் அதிகாரிகள் இத் திட்டத்திற்கு தங்களின் தொழில்முறை உதவிகளை வழங்கியதுடன், 11 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 05 அதிகாரிகள் மற்றும் 65 சிப்பாய்கள் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.