Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th October 2024 22:51:02 Hours

11 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் கலல்பிட்டியவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்தியல் முன் முயற்சியால் 11 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள 1 வது இலங்கை ரைபிள் படையணியின் படையினர் இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 ஒக்டோபர் 19 ஆம் திகதி மாத்தளை கலல்பிட்டியவில் வசிக்கு தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

புதிதாகக் கட்டப்பட்ட வீடு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு 306 பி/2 ஓஷன் சிட்டி லயன்ஸ் கிளப் மற்றும் அப் பகுதியின் நன்கொடையாளர்களின் எண்ணகருவிற்கு அமைவாக, நிதி பங்களிப்பை வழங்கினர். இந்த நிகழ்வின் போது சிறுவர்களுக்கான 30 எழுதுபொருட்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் கிராம மக்களுக்கு 500 இலவச முக்குகண்ணாடிகள், 500 மதிய உணவு பொதிகள், 300 பாக்கு கன்றுகள் மற்றும் 10 தச்சு கருவிகளும் வழங்கப்பட்டன.

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி, மற்றும் அவரது துனைவியர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், நன்கொடையாளர்கள், பயனாளிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.