30th October 2024 18:46:12 Hours
11 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யு. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். கிரிக்கெட் போட்டி 2024 ஒக்டோபர் 21 மற்றும் 29 ஆம் திகதிகளில் 1 வது இலங்கை ரைபிள் படையணி மைதானத்தில் நடைப்பெற்றது.
11 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் அணிகள் போட்டியிட்டன. நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2 வது இலங்கை ரைபிள் படையணி அணி சம்பியன்ஷிப் ஆனதுடன், 642 வது காலாட் பிரிகேட் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.