07th May 2024 18:51:16 Hours
இலங்கை தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் செயலாளர் திரு. ஜனக தேசப்பிரிய அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மத்திய பாதுகாப்புத் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு வழங்கிய அறிவுறுத்திலுக்கமைய 04 மே 2024 அன்று பார்வையற்றோரின் கண்டி மற்றும் மஹியங்கனை சிறப்புப் பயணத்தின் போது உதவினர்.
11 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 70 பார்வையற்றோருக்கு உணவு கொடுத்து 05 மே 2024 அன்று காலை அவர்கள் புறப்படும் வரை தங்குமிட வசதியை வழங்கினர். இத் திட்டம் 11 வது காலாட் படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரியால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நபர்களுக்கு அவர்களின் பயணத்தின் போது வசதி மற்றும் ஆதரவான அனுபவத்தை உறுதிபடுத்தியது.