28th December 2024 13:55:59 Hours
குலுகம்மன பிரேமரத்ன மகா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, 2024 டிசம்பர் 26 ஆம் திகதி 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பாடசாலையின் கீழைத்தேய இசைக் குழுவிற்கு இசைக்கருவிகள் விநியோகிக்கப்பட்டன. இந்த முயற்சி 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.
இந்த நன்கொடையானது, இசைக்குழுவின் பயன்படுத்த முடியாத இசைக்கருவிகளை மாற்றுவதன் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன், மாணவர்களின் இசை செயல்பாடுகளுக்கு ஆதரவை வழங்குகின்றது. இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.