09th June 2023 19:19:49 Hours
கல்வி அமைச்சு மற்றும் வண. ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் ஆகியோர் இணைந்து வழங்கிய அனுசரணையின் மூலம் ஹங்குரன்கெத்த திம்புல்குபுர வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக, 11 வது காலாட் படைப்பிரிவின் 4 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 17 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினர், தமது தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவளத்தை வழங்கினர்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஜூன் 04 ஆம் திகதி பாடசாலை மாணவர்களிடம், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.
மேற்கூறிய அதே பௌத்த துறவி வழங்கிய அனுசரணையால், பாடசாலையில் 157 மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அனுசரணை வழங்கிய பௌத்த பிக்குகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.