Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2023 22:30:22 Hours

11 வது காலாட் படைபிரிவின் புத்தாண்டு நிகழ்வு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் செவ்வாய்க்கிழமை (11) பல்லேகலவில் உள்ள 1 வது இலங்கை ரைபிள் படையணியின் முகாம் வளாகத்தில் அதன் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

பல சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய நிகழ்வுகள், கயிறு இழுத்தல், "அழகுராணி" தேர்வு, யானைக்கு கண் வைப்பது, பன் உண்ணுதல் மற்றும் பல விளையாட்டுகள் இந் நிகழ்வில் இடம் பெற்றன.

மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பிஎஸ்சீ புத்தாண்டு போட்டிகள் மற்றும் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

11 வது காலாட் படைபிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் ‘இப் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.