Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2024 18:07:30 Hours

11 வது இலங்கை பீரங்கி படையணியின் படையலகு பயிற்சி நிறைவு

11 வது இலங்கை பீரங்கி படையணியின் படையலகு பயிற்சி பாடநெறி ஆலங்குளம் படையலகுப் பயிற்சிப் பாடசாலையில் 17 ஜனவரி 2024 முதல் 05 மார்ச் 2024 வரை இடம்பெற்றது.

12 அதிகாரிகளும், 368 சிப்பாய் இப்பயிற்சியில் கலந்து கொண்டதுடன், இப்பாடநெறி பல்வேறு இராணுவப் பாடங்களிலும் அறிவைப் புதுப்பிக்கவும், செம்மைப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

பாடநெறியின் இறுதியில், 'புதுமாத்தளன் இறுதி யுத்தம் பற்றிய விளக்கக்காட்சி காட்சிப்படுதப்பட்டதுடன், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.எச் குலதுங்க ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் நிறைவுரை ஆற்றப்பட்ட்டது.

பின்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டன:

- சிறந்த மாணவர்: பொம்படியர் கே.ஜி.சி கஹட்டபிட்டிய

- சிறந்த துப்பாக்கி சூட்டூ வீரர்: லான்ஸ் பொம்படியர் யு.ஏ. சிந்தக்க

- சிறந்த உடற் தகுதி வீரர்: லான்ஸ் பொம்படியர் எம்.ஆர்.எஸ்.கே தர்மசிறி

- சிறந்த நிறுவனம்: 35 வது பேட்டரி

- சிறந்த குழு கட்டளையாளர்: லெப்டினன் டி.ஏ.எச்.திலக்ஷன

- சிறந்த பிரிவு கட்டளையாளர்: பொம்படியர் ஜி.எம்.பி.எல் கிரிதலே ஆர்எஸ்பீ