21st January 2025 16:33:36 Hours
11 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இஜீஜேபீ எதிரிசிங்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் கிருதேவி இந்து தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சிவபிரகாஷ் பாடசாலையின் 125 மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடையாக வழங்கும் திட்டத்தை 2025 ஜனவரி 18, அன்று முன்னெடுத்தனர்.
மேலும், நிகழ்வின் சிவ பிரகாஷ் பாடசாலையின் மேசைகள், கதிரைகள் மற்றும் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசப்பட்டன.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான நிதியுதவியை “மனு சரண பிக்குகள் ஒன்றியத்தின்” தலைவர் வண. கத்தொறுவே சிறிதர்ம தேரர் வழங்கினார்.
மதகுருமார்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.