Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th April 2023 17:00:32 Hours

11 வது படைப் பிரிவு மற்றும் மத்திய படையினரால் மத அனுஷ்டான நிகழ்வுகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க மற்றும் 11 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார ஆகியோரின் வழிகாட்டலுக்கமைய மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப் பிரிவு இணைந்து தொடர்ச்சியான சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது. இத் திட்டமானது மார்ச் 30 - 31 ம் திகதிகளில் மஹியங்கனை ரஜ மகாவிஹார வளாகத்தில் இடம் பெற்றது.

வெள்ளிக்கிழமை மார்ச் 30 ம் திகதி படையினரால் 'போதி பூஜை' நடத்தப்பட்டதுடன் மகா சங்க உறுப்பினர்கள் பீரித் ஓதுதல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பு தர்ம சொற்பொழிவைக் வழங்கினர். நிகழ்வின் அடுத்த நாள் மஹியங்கனை விகாரையில் மகா சங்கத்தினருக்கு காலை உணவு புத்த பூஜையை நடத்திய பின்னர் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 11 வது காலாட் படை பிரிவின் தளபதி ஆகியோருடன் 50 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இணைந்து கொண்டதுடன், வீரமரணம் அடைந்த போர் வீரர்கள் மற்றும் சேவையில் இருக்கும் படையினருக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.