17th April 2023 18:10:02 Hours
பௌத்த பிக்கு ஒருவரின் அனுசரணையுடன், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பல்லேகலை 11 வது காலாட் படைப்பிரிவு, ஏப்ரல் 10 ஆம் திகதி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படைப்பிரிவில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களுக்கு 31 பரிசுப் பொதிகளை வழங்கியது.
மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.
இந்நிகழ்வுக்கான அனுசரணையை யதிஹலகல ரஜ மகா விகாரையின் பிரதமகுரு வண. ஹடகனாவே சம்மதார தேரர் வழங்கினார்.
ஒவ்வொரு பயனாளிக்கும் உலர் உணவு பொதிகள் 6000 ரூபா பெறுமதியான அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், கொண்டதாக காணப்பட்டது.