13th November 2023 20:18:53 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் நவம்பர் 7 ஆம் திகதி பிதுருதலாகல 3 வது (தொ) இலங்கை சிங்க படையணிக்கு உத்தியோகபூர்வ கள விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த படைப்பிரிவின் தளபதியை 3 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி வரவேற்றதுடன். படையலகின் தற்போதைய வகிபங்கு மற்றும் பணி தொடர்பாக விளக்கமளித்தார்.
பின்னர், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 3 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரியுடன் இணைந்து படையினருக்கு உரையாற்றுவதற்கு முன்னர் அவர் படையலகினை பார்வையிட்டார்.
தளபதி அவர்கள், படையலகின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழுப்படமும் எடுத்துகொண்டார்.