06th June 2023 17:36:40 Hours
மாத்தளை ஓவில்கந்த பிரதேசத்தில் வசிக்கும் 71 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 'பொசன்' பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (ஜூன் 3) 11 வது காலாட் படைபிரிவின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அப்பகுதியைச் சேர்ந்த சில அனுசரனையாளர்களின் உதவியுடன், தலா ரூ. 5000/= பெறுமதியான நிவாரணப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
11 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் , பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று இப் பொதிகளை வழங்கினார்.
சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணவு பொதிகளை எடுத்துச் சென்று வழங்கினர்