Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 13:10:57 Hours

11 வது காலாட் படைபிரிவினரால் காணாமல் போன சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் 2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி படையினர் கண்டி அம்பிட்டிய பெக்பேக்கர்ஸ் விடுதியின் முறையீட்டின்படி, புதன்கிழமை (12) முதல் விடுதியில் இருந்து காணாமல் போன டென்மார்க் சுற்றுலாப் பயணி ஒருவரை அலகல்ல மலைப்பகுதியில் சடலமாக மீட்டுள்ளனர்.

புதன்கிழமை (12) காலை 10.00 மணியளவில் டென்மார்க் நாட்டவர், (செல்வி) கார்ப் முன் கேப்சன் மலையேற்றத்திற்குச் செல்வதாகவும், அன்று மாலை திரும்புவதாகவும் ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார், ஆனால் அவர் திட்டமிட்டபடி ஹோட்டலுக்குத் திரும்பவில்லை.

வியாழன் (13) பிற்பகல் 3.00 மணியளவில் ஹோட்டல் நிர்வாகத்தினர் கண்டி சுற்றுலாப் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் குறித்த நபரை கண்டறியும் பொருட்டு 11 வது காலாட் படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் இன்று (14) காலை மலைத்தொடரின் அடிவாரத்திற்கு அருகிலுள்ள இடத்திலிருந்து காணாமல் போனவரின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சடலம் பொலிஸார் மற்றும் படையினரால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.