29th July 2024 17:26:15 Hours
11 வது இலங்கை கள பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஜிசிகே குடாகமகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் 11 வது இலங்கை கள பொறியியல் படையணி படையினர் 2024 ஜூலை 25 ஆம் திகதி நாவற்குழி லக்தரு பாலர் பாடசாலையின் சிறார்களுக்கு மதிய உணவை வழங்கினர்.
இந்த விருந்தோம்பல் செயலானது பிள்ளைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களினால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், இந்த காலத்திற்கேற்ற தேவையை நிவர்த்தி செய்த இலங்கை இராணுவத்தினருக்கு அவர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.