09th September 2024 15:03:33 Hours
11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் அம்பாறை மடவலலந்த பிரதேசத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இந்த திட்டம் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 241 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்பீசீ ஹெட்டியாராச்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 03 செப்டம்பர் 2024 அன்று பயனாளிக்கு திறப்பை கையளித்தார். இந்த திட்டம் அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள சமூகங்கத்தினரின் ரூ. 5,091,610, பெறுமதியான நிதி மற்றும் பொருள் உதவியின் மூலம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இக் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.
அதே தினத்தில், 241 காலாட் பிரிகேடினால், ஹேமாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் தமன பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 32 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேற்று உதவிகளை வழங்கப்பட்டது. இந்த முயற்சி பின்தங்கிய குடும்பங்களின் தாய்மார்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதாகும்.
நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.