Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2020 13:00:30 Hours

11 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

பிரிகேடியர் சாரத சமரகோன் அவர்கள் 11 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (03) ஆம் திகதி பல்லேகளையில் அமைந்துள்ள தலைமையகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாய் பதவியேற்ற படைத் தளபதி அவர்கள் தலைமையகத்திற்கு வருகை தருகையில் 10 ஆவது கஜபா படையணியினால் இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்னர் தளபதி அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு கையொப்பமிட்டு தனது பதவியை பாரமேற்றுக் கொண்டனர்.

இச் சந்தர்ப்பத்தில் கட்டளை தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க வியடமாகும். Sports News | adidas NMD Human Race