Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2020 06:14:50 Hours

11 ஆவது படைப் பிரிவின் படையினரால் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்நெடுப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவிற்குட்பட்ட 3 ஆவது இலங்கை சிங்க படையணி மற்றும் 19 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் நுவரெலியா, ஹட்டன், டிக்ஓயா ஆகிய பொது நகர்ப்புறங்களில் ஜூன் 19 -20 ஆம் திகதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இந்த திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் வழிகாட்டுதல்களின் பிரகாரம் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜாலிய சேனரத்ன மற்றும் பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், படையினர் நுளம்பு அதிகமாக இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தேடி, பாதிக்கப்படக்கூடிய இடங்களை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். Best Nike Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News