Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2024 16:51:40 Hours

102 வது தேசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் வெற்றி

102 வது தேசிய தடகள சம்பியன்ஷிப் போட்டி 2024 ஜூன் 27 அன்று முடிவடைந்தது. இப்போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் சம்பியனாகினர். 2024 ஜூன் 25 முதல் 27 வரை நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 250க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய தடகளப் போட்டி ஆனது இலங்கை தடகளக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாதனையாளர்கள் பின்வருமாறு:

- ஈட்டி எறிதல் - முதலாம் இடம் (ஆண்கள்) - கோப்ரல் ஆர்.எம். ரணசிங்க - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

- உயரம் பாய்தல் - முதலாம் இடம் - லான்ஸ் பொம்பார்டியர் எஸ்ஏடீ தசுன் - இலங்கை பீரங்கி படையணி

- முப்பாச்சல் - முதலாம் இடம் - சிப்பாய் கேஎம் யசிறு - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

- 400 மீ (ஆண்கள்) – முதலாம் இடம் – பணி நிலை சாஜன் எஸ்ஏ தர்ஷன - இலங்கை பீரங்கி படையணி

- வைத்தியர் என் எதிரிவீரசிங்கம் சவால் கிண்ணம் - உயரம் பாய்தல் - முதலாம் இடம் - லான்ஸ் பொம்பார்டியர் எஸ்ஏடி. தசுன் - இலங்கை பீரங்கி படையணி

- 400 மீ (பெண்கள்) - முதலாம் இடம் – பணி நிலை சாஜன் ஆர் நதீஷா - இலங்கை இராணுவ மகளிர் படையணி

-1000 மீ (பெண்கள்) – முதலாம் இடம் – பெண் சிப்பாய் டபிள்யூஏஎம்ஆர் விஜேசூரிய - இலங்கை இராணுவ மகளிர் படையணி

-100 மீ – தடை தாண்டல் (பெண்கள்)- முதலாம் இடம் – சார்ஜன் டபிள்யூவிஎல் சுகந்தி - இலங்கை இராணுவ மகளிர் படையணி

- ஈட்டி எறிதல் - முதலாம் இடம் (பெண்கள்) – பணி நிலை சாஜன் எச்எல்என்டி லேகம்கே - இலங்கை இராணுவ மகளிர் படையணி

- 800 மீ (ஆண்கள்) முதலாம் இடம் – சிப்பாய் பிஎம்எச்எஸ் கருணாரத்ன – இலங்கை இராணுவ சேவைப் படையணி

சகலதுறைகளிலும் சிறந்தவர் – பணி நிலை சாஜன் எஸ்.ஏ.தர்ஷன - இலங்கை பீரங்கி படையணி