01st April 2023 19:00:04 Hours
2023 ஜனவரி 30 முதல் பெப்ரவரி 21 வரை அம்பாறை காலாட்படை பயிற்சி பாடசாலையில் நடைப்பெற்ற அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ‘தலைமைத்துவம் மற்றும் தொழில் அபிவிருத்தி பாடநெறி-48’ இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அம்பாறை காலாட்படை பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் ஆர் பி முனிபுர தலைமையில் நடைபெற்றது.
வெவ்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 102 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஒரு மாத காலப் பயிற்சியைப் பயின்றனர். இலங்கை இராணுவ மகளிர் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டி.எச்.டி ரஷ்மி பாடநெறியில் சிறந்த மாணவியாக விருது பெற்றார்.