11th October 2021 10:50:31 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் கஜசிங்கபுரவில் அமைந்துள்ள 213 வது பிரிகேட் சிப்பாய்களால் திங்கள்கிழமை இராணுவ தினத்தை முன்னிட்டு வவுனியா தேசிய வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது.
21 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொகான் ரத்நாயக்க, 72 வது இராணுவ ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கத்துடன், வன்னி பாதுகாப்புப் படைத் தளபதியின் ஆசியுடன் நிகழ்வை ஏற்பாடு செய்தார்.
வன்னி, பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதோடு, 213 வது பிரிகேட் தளபதி கேணல் எல்ஜிஜேஎன்.அரியதிலக அவர்களின் ஆவதரவுடன் படையினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2 வது காலாட் படை பட்டாலியன் படையணி, 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படை பட்டாலியன்கள், 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படை பட்டாலியன்கள் , 213 வது மற்றும் இயந்திர பொறிமுறைப் காலாட் பயிற்சி நிலையம் உள்ளடங்களாக 100 சிப்பாய்களால் இரத்த தானம் வழங்கியதோடு, படையணிக்கு அண்மையிலிருக்கும் விகாரையொன்றின் பிக்குகள் இருவரும், 213 வது பிரிகேட் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், கட்டளை அலகுகளை சேர்ந்தவர்கள் ஆகியோரும் வவுனியா தேசிய வைத்தியசாலையின் வைத்திய ஆர் இந்துஜா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த இரத்தான நிகழ்வில் பங்கேற்றனர்.