30th September 2024 17:45:42 Hours
10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி 25 செப்டம்பர் 2024 அன்று ஜே/432 வெற்றிலைகேணி கிராம சேவகர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தொழிலற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. இம்முயற்சி 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.எச் சுதசிங்க அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் சமூகத்தில் தேவையுடையவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது.