26th October 2024 22:56:02 Hours
10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் 2024 ஒக்டோபர் 24 அன்று சேதமடைந்திருந்த குதிரைவந்த குளக்கட்டினை மறுசீரமைத்தனர். 54 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் கட்டளையின் கீழ் 541 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் கீழ் சில மணிநேரங்களில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன.
இலங்கை கடற்படையினர் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டு, விரைவான மற்றும் வெற்றிகரமான மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பங்களித்தனர்.