Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2023 21:25:24 Hours

10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினால் சிறுவர்கள் மற்றும் முதியோருக்கு அன்பளிப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது காலாட் பிரிகேட்டின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் 74 வது இராணுவ ஆண்டுவிழா மற்றும் சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 1) பத்தரமுல்லை மாநகரசபை முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கி மகிழ்வித்தனர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ மற்றும் 144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேடிசீஎல் விஜேநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோர் வழங்கிய வழிகாட்டுதல்களின் படி இச்சமூகம் சார்ந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மதிய உணவு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், கலிப்சோ இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் வழங்கிய நிதியுதவி சிறுவர்கள் மற்றும் முதியோருக்கான இந்நிகழ்வை நடத்துவதற்கு உதவியது.

144 வது காலாட் பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், 144 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.