Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2024 19:10:01 Hours

10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினரால் சமூக நலத்திட்டம்

75வது இராணுவ தினத்தை முன்னிட்டு, 144 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ்,10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி பத்தரமுல்ல நகரிலுள்ள முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்தில் விஷேட நிகழ்வென்று ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, 111 முதியவர்களுக்கும், 4 சிறுவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், சிறுவர்களின் கல்வித் தேவைக்காக எழுதுபொருட்கள் வழங்கப்பட்டதுடன், முதியோர்களுக்கு மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.