Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2025 11:11:24 Hours

10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் தென்னியன்குளம் குளக்கட்டு சீரமைப்பு

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, தென்னியன்குளம் குளக்கரையின் நிரம்பி வழியும் இடம் சிறிது சேதமடைந்துள்ளது. இதனால் வரவிருக்கும் பேரழிவை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில், 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஏகே ஹேவாபதகே அவர்களின் மேற்பார்வையில் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2025 ஜனவரி 19 அன்று சீரமைப்பு பணிகளை முன்னெடுத்தனர்.

10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 03 அதிகாரிகள் மற்றும் 30 சிப்பாய்களை கொண்ட குழுவினர், அரச அதிகாரிகள் மற்றும் சுமார் 100 உள்ளூர்வாசிகளின் ஆதரவுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இது சமூக கூட்டாண்மையின் வலுவான உணர்வை வெளிப்படுத்துகின்றது.