11th September 2024 15:03:56 Hours
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 561 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால், நிர்மாணிக்கப்பட்ட வீடு 06 செப்டம்பர் 2024 அன்று வவுனிக்குளம் பிரதேசத்தில் வசிக்கும் பயனாளிக்கும் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
பரந்தானைச் சேர்ந்த திரு.குலேந்திரன் ரவி அவர்களின் நிதி நன்கொடையில் இப்புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாலிநகர் தேசிய பாடசாலையின் அதிபர் திரு. ஸ்ரீ கமலநாதன் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.