11th August 2023 20:24:00 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் 583 வது காலாட் பிரிகேடின் 1 வது சிங்க படையணி படையினர் 09 ஓகஸ்ட் 2023 அன்று மீரிகம, வில்வத்த புகையிரத கடவையில் கன்டெய்னர் வண்டி ஒன்று வேகமாகப் பயணித்த புகையிரதத்துடன் மோதியதை அடுத்து பஸ்யால-கிரியுல்ல வீதியில் ஏற்பட்ட நெரிசலை சீர்செய்வதற்காக ரயில்வே திணைக்களம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் போக்குவரத்தினை சீர்செய்வதற்கு உதவினர்.
அதிகாரிகள் உட்பட 25க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றுவதற்கும் பிரதான வீதியூடாக வாகனப் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கும் தமது முழுமையான ஆதரவை வழங்கினர்.