Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2023 20:56:10 Hours

1 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 143 வது காலாட் பிரிகேடின் 1 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர் மேலும் ஒரு சமூக நலத்திட்டத்தை ஒருங்கிணைத்து வாரியபொல தம்பராவ ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, 80,000 ரூபா பெறுமதியான பாடசாலை கருவிகள் மற்றும் எழுதுபொருட்களை 04 ஏப்ரல் 2023 அன்று விநியோகித்தனர்.

படையினர்களின் வேண்டுகோளின் பேரில் முன்னெடுக்கப்பட்ட சமூக நலன் சார் திட்டத்திற்கு அரச அபிவிருத்தி வங்கிக் கிளைகளிளால் அனுசரணை வழங்கப்பட்டது. 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் 143 வது காலாட் பிரிகேடின் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் படி 1 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினரால் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

1 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பாடசாலை சமூகம் விநியோக திட்டத்தில் பங்கேற்றினர்.