Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2024 14:25:05 Hours

1 வது இயந்திரவியல் காலாட் படையணி படையினரால் கொட்டான் குளத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதி சீரமைப்பு

கொட்டான் குளத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்த வீதியை 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீ ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 552 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 1 வது இயந்திரவியற் காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 1 வது இயந்திரவியற் காலாட் படையணி படையினரால் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் விரைவான செயற்பாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்குவதை உறுதிசெய்தது, சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் தணிக்கப்பட்டன.