09th May 2023 21:45:28 Hours
இரணைமடு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள 6000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெசாக் தினத்தன்று (மே 5) கிளிநொச்சி 1 ம் படைத் தலைமையகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட அன்னதானம் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1 ம் படை தலைமையக தளபதியும் பொது பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூபீடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, அவர்களினால் இணைந்து 1 ம் படைத் அன்னதானம் மற்றும் வெசாக் அலங்காரங்கள் திறந்து வைக்கப்பட்டது. கென்கல்ல விகாரையின் பிரதமகுரு வண.பிம்புரே தர்மதேவ தேரர் அவர்களினால் ஆசி உரையினை வழங்கி ‘அன்றைய நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
1ம் படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் கூடு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்வின் இறுதியில் பிரதம அதிதியான 1 ம் படை தளபதி அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 1 ம் படை தளபதி இந்த நிகழ்வை பார்வையிட வருகை தந்த பொதுமக்களுடன் நட்பு ரீதியாக கருத்துகளை பரிமாறி கொண்டார்.