Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2021 12:57:32 Hours

1 படையணின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

கிளிநொச்சியில் உள்ள புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 1 படையணின் 1 வது தளபதியாக மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க 2021 ஒக்டோபர் 18 ஆம் திகதி அவரது அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இராணுவ சம்பிரதாயங்களின்படி, புதிதாக நியமிக்கப்பட்ட 1 படையணியின் தளபதிக்கு சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு சிப்பாய்களுக்கான உரையின் போது, அர்ப்பணிப்புடன் ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும், இந்த பெருமைமிக்க அமைப்பின் வீரர்களாக தொடர்ந்து பயிற்சியளிப்பதன் மூலம் அவர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதையும் அவர் கூறினார். பின்னர் புதிய 1 படையணியின் புதிய தளபதியால் மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து படைணியருடன் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் போது கொமாண்டோ, சிறப்பு அதிரடிப் படையணி, சிறப்புப் படையணி, கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பகுதி படை ஆகிய படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 53, மற்றும் 58 வது படைப்பிரிவின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள் ,கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.