Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2020 07:00:26 Hours

1 ஆவது இராணுவ பொதுசேவை படையணியினரால் புதிய பொது பேருந்து ஓய்விட கட்டிடம் நிர்மாணிப்பு

1ஆவது இலங்கை இராணுவ பொதுசேவை படையணியினரால் பயணிகளின் நலன் கருதி எல்ல கந்தலாயில் உள்ள சூரியபுர சந்திக்கு அருகே புதிய பொது பேருந்து ஓய்விட கட்டிடமானதுநிர்மாணிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (18) ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக விடப்பட்டன.

1 ஆவது இலங்கை இராணுவ பொதுசேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி.எஸ்.தெமுனி அவர்கள்குறித்த கட்டிடத்தை நிர்மாணித்த அதிகாரிகள் மற்றும் படையினர்ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார்.

அதே நாளில், அவர் தனது பட்டாலியனுக்கான விஜயத்தின் போது, இராணுவ சிப்பாயினரின் நலனுக்காக ஒரு புதிய சலூன் பிரிவையும்திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாயினர் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர். buy footwear | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1