Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th October 2021 07:00:04 Hours

“சந்தஹிரு சேய” சூடா மாணிக்கத்தை எடுத்துச் செல்லும் பணிகள் 12 வது படைப்பிரிவினரால் முன்னெடுப்பு

சந்தஹிரு சேயவின் தூபியில் ஸ்தாபிக்கப்படவிருக்கும் சூடாமாணிக்கம் வாகன அணிவகுப்பில் 4-7 ஆம் திகதிகளில் மொனராகலைக்கு எடுத்து வரப்பட்டபோது மத்திய பாதுகாப்பு படைப்பிரிவின் 12 வது படைப்பிரிவின் 122 வது பிரிகேடின் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் மற்றும் 23 வது கஜபா படையணியினர் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கினர்.

ஓகஸ்ட் 5 ஆம் திகதி மகா சங்கத்தின் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராமாய விகாரையில் பொது மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த சந்தஹிரு சேயவின் தூபியில் ஸ்தாபிக்கப்படவிருக்கும் சூடாமாணிக்கம் நாடு முழுவதும் 47 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக 18 மாவட்டங்களில் உள்ள 48 விகாரைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலின் கீழ் மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றன.