Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2021 12:30:49 Hours

“அப்பாவைப் போலவே மகன்” என்பதை நினைவூட்டும் வகையில் இலங்கை பீரங்கிப் படையணியின் 22 வது தளபதியவர்களின் கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு மைல்கல்லை பதிவு செய்யும் வகையில் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் 22 வது தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க அவர்கள் கடமைகளை வியாழக்கிழமை (23) பொறுப்பேற்றுகொண்டார்.

மேற்படி புதிய தளபதியவர்கள் இலங்கை இராணுவ புகழ்மிக்க தளபதிகளில் ஒருவரும் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கைகளின் தளபதியும் , முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் முதலாவது படைத் தளபதியாகவும் பதவி வகித்த (ஓய்வு) ஜெனரல் ஹெமில்டன் வணசிங்க அவர்களின் புதல்வர் என்பது சிறப்பம்சமாகும்.

இலங்கை பீரங்கி படையணியின் புதிய படைத் தளபதியவர்கள் பொறுப்பேற்பதை முன்னிட்டு பனாகொடவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் தலைமையக வளாகத்தில் போரில் உயிர் நீத்த பீரங்கிப் படையணியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

அதேநேரம், மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க புதிய நியமனத்தை பொறுப்பேற்பதற்காக வருகை தந்த போது சிப்பாய்களால் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனையடுத்தி நிகழ்வில் மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்ட பின்னர் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் அலுவலக கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களின் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் சபை உறுப்பினர்கள், கட்டளை அதிகாரிகள் ஆகியோரும் பனாகொடையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் மற்றுமொரு அம்சமாக மேஜர் ஜெனரல் வனசிங்க அவர்களின் வருகையை குறிக்கும் வகையில் படையணி வளாகத்தில் மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டதோடு, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடனான புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் தளபதியவர்கள் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் ஒன்றிலும் கலந்துகொண்டிருந்தார்.

அதேசமயம், அதிகாரிகளின் உணவக அறையில் பிக்குகளுக்கு ஏற்பாடு செய்யப்ட்ட விஷேட அன்னதான நிகழ்வில் அன்றைய பிரதம அதிதி கலந்துகொண்டதுடன் அங்கு இடம் பெற்ற மதிய உணவு நிகழ்வினையடுத்து அன்றைய நிகழ்வு நிறைவடைந்தது. நடைமுறைகளின் போது கடுமையான கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டன.

மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க தற்போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதியாக கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.