Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2022 17:57:23 Hours

“அபிமன்சல – 1” இல் முன்னேற்றகரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போர் வீரர்களின் திறன்களைக் கண்டு இராணுவ தளபதி வியப்பு

அநுராதபுரத்தில் புராதனமானதும் பல்வகை உயிரினங்கள் நிறைந்ததுமான வளமமிக்க நுவரவெவக் கரையில், நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களுக்காக அமைக்கப்பட்ட்டுள்ள உள்ள 'அபிமன்சலா 1' புனர்வாழ்வு நிலையத்திலுள்ள போர்வீரர்கள் சிலரால், சேதன பசளை உற்பத்தி செயல்முறை, ஈர்க்கிள் துடைப்பங்கள் மற்றும் உள்நாட்டு தும்புதடி உற்பத்தி ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும். இவர்கள் வைத்திய நிபுணர்கள் மற்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான வல்லுனர்களினால் முன்னேற்றகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் என்பதோடு அவர்களின் சிகிச்சைகளுக்கு அவசியமான மரக்கறி வகைகள் மற்றும் மூலிகைச் செடிகளும் அங்கு பயிரிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் மேற்படி அபிமன்சல – 1 புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படும் போர் வீரர்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பார்வையிடுமாறு விடுக்கப்பட்ட அழைப்பையேற்று அவர்களின் திறன் சார் உற்பத்திகளை வியாழக்கிழமை (10) பார்வையிட்ட பாதுகாப்பு பதவி பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வியப்படைந்தார். இராணுவ தளபதியவர்கள் ஒதுக்கிய நேரத்தை வீணடிக்காமல் அதற்கு பயனளிக்கும் வகையில் உற்பத்திச் செயற்பாடுகள் அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

இதன்போது, பிரதம விருந்தினர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் இணைந்து, அங்கவீனமுற்ற வீரர்களின் உடல் நிலை மற்றும் அவர்களால் தயாரிக்கப்பட்ட தரமான தும்புத்தடி மற்றும் உள்நாட்டு விளக்குமாறுகள் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் காயமடைந்த போர் வீரர்களின் மற்றுமொரு குழுவினரால் பயிரிடப்பட்ட மாங்காய், உருளைக்கிழங்கு, மரக்கறி செய்கைகளையும் பார்வையிட்டார்.

மேலும், இங்கு பயிரிடப்படும் மரக்கறி வகைகளை உள்நாட்டில் பெற்றுக்கொள்வது அரிதானது என்பதோடு, மேற்படி புனர்வாழ்வு நிலையத்தில் வசிப்போரின் வாழ்க்கைக்கு அவை இன்றியமையாதவையாக அமைந்துள்ளன. மேலும் பெரும்பாலான அங்கவீனமுற்ற வீரர்கள் அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.