21st August 2023 22:07:02 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் ‘படையலகுகளுக்கு இடையிலான நீச்சல் சாம்பியன்ஷிப் -2023’ இன் இறுதிப் போட்டியும் சான்றிதழ் வழங்கும் விழாவும் 18 ஓகஸ்ட் 2023 அன்று பனாகொட இராணுவ நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.
முதலாவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி, அன்றைய பிரதம அதிதியான இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களை ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக வரவேற்று 2023 நீச்சல் சாம்பியன்ஷிப்பை சம்பிரதாயமாக ஆரம்பித்து வைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
புதியவர்கள் மற்றும் திறந்த பிரிவுகளின் கீழ் ஏழு இலங்கை இராணுவ பொலிஸ் படையணிகள், சிறப்பு புலனாய்வு பிரிவு, இராணுவ பொலிஸ் படையணி பாடசாலை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி 75க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் நீச்சல் வீர/வீராங்கனைகள் போட்டியில் போட்டியிட்டனர்.
சாம்பியன்ஷிப்பை (ஆண்) போட்டியில் முதலாம் இடம் முதலாவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியுடன், இரண்டாம் இடம் 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியும் பெற்றுக் கொண்டது. 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிப்பாய் டிஎம்எஸ்டி தென்னகோன் சிறந்த நீச்சல் வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.
படையலகுகளுக்கிடையிலான பெண்களுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் கிரிதலே இராணுவ பொலிஸ் பாடசாலையின் மகளிர் நீச்சல் வீராங்கனைகள் வெற்றிபெற்றனர்.
சாம்பியன்ஷிப்பில் சிறந்த நீச்சல் வீராங்கனையாக 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூஎம்கேடி பண்டார அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் நீச்சல் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிலைய தளபதி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறுதிப் போட்டிகளையும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவையும் நேரில் பார்வையிட்டனர்.