Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2019 19:43:14 Hours

‘நெத் எப்எம்’ தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்வில் இராணுவ தளபதி பங்கேற்பு

நெத் எப்எம் ஊடக நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான விருதளிப்பு விழாவானது இம் மாதம் (13) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதியை நெத் எப்எம் ஊடக நிறுவனத்தின் தவிசாளர் திரு நிஹால் செனவிரத்ன அவர்கள் வரவேற்றார்.

விருதளிப்பு நிகழ்வில் அதிதிகளாக திரு தீபால் சூரியாரச்சி தனியார் அபிவிருத்தி பயிற்சி பணிப்பாளர் திரு என் கருணாபால, பிரதான முகாமைத்துவ பணிப்பாளர் திரு அசங்க ஜயசூரிய, மேகன்ட் தனியார் வங்கியின் முகாமையாளர் திரு நிஷாந்த தஹநாயக மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் டீ.ஜி.எம் நுவன் லியனகே அவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

நெத் எப்எம் ' சிறந்த அறை '(செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள்), சிறந்த பணியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதுகள் இந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த விருதளிப்பு நிகழ்வில் திரு ஹேமந்த கஹவல்லகே, திரு நிலந்த பிரதீப் அவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

நெத் எப்எம் ஊடக நிறுவனமானது ஆரம்பமாகி 14 வருடங்களை கடந்த நிலையில் இந்த விருதளிப்பு நிகழ்வில் விருதாளிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.Authentic Sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta