Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2020 19:39:24 Hours

‘தேசிய போர் வீரர்கள் தினத்தில் வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள்

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையின் படை வீரர்கள் , பயங்கரவாத தாக்குதலில் தேசத்துக்காக உயிர் நீத்தமைக்கான நினைவாக அஞ்சலி செலுத்தும் வகையில் 11 ஆவது தேசிய போர் வீரர்கள் தினமானது (மே 19) பத்தரமுல்லை தேசிய போர் வீரர்களின் நினைவுதூபி(ஜாதிக ரணவிரு ஸ்மரகய) வளாகத்தில் முப்படைகளின் தளபதியும் , இலங்கை ஜனதிபதியுமான அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில்,கௌரவ பிரதமர், மேல் மாகாண ஆளுநர் கடற்படையின் அட்மிரல், ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதாணியும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், ரணவீரு சேவா அதிகார சபைத் தலைவர்,மற்றும் உயிர்நீத்த போர் வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

ரண விரு சேவா அதிகார சபையினால் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆண்டின் 11 வது தேசிய போர் வீரர்களின் தின நினைவு விழாவானது, பிரதம அதிதியாக முப்படைகளின் தளபதியும் , அதிமேதகு ஜனதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வருகையின் பின்னர் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய இந்த நிகழ்வுக்கு கௌரவ பிரதமர் மற்றும் ஏனைய அதிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு மே மாத்த்திற்கு முன்னர் எல்.டி.டி.ஈ பயங்கர பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மிக உயர்ந்த தியாகத்தை நிலைநாட்டிய இராணுவ போர் வீரர்கள் (23,962), கடற்படை வீரர்கள் (1160), விமானப்படை (443), 2598 பொலிஸ் படையும் 456 சிவில் பாதுகாப்புத் படையினர்களும் மொத்தம் 28,619 போர் வீரர்களையும் இந்த தேசிய விழாவின் போது இலங்கையில் உள்ள அனைத்து அமைதியை நேசிக்கும் ஒவ்வொறுவரும் மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறார்கள், தேசிய கீதம் பாடலுதல், அவர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், துணிச்சலுக்கான மேற்கோளைப் படித்தல், மத அனுஷ்டானங்கள், 'ரண பெர' விஜில் மௌன்டிங் வாசித்தல் , ஜனாதிபதியின் உரை, நினைவு தூபிக்கு வான்வழி பூக்கள் தூவுதல் ஆகிய நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன. நினைவு தூபிக்கு வான்வழி பூக்கள் தூவிய பின்னர், அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், ஆளுநர், செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனையோர் , யுத்தத்தினால் உயிர் நீத்த படை வீரர்களின் உறவினர்களுடன் இணைந்து நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெறும்.

மாலை வேளையில் இராணுவ சம்பிரதாய முறைப்படி மற்றும் இராணுவ ரெவில்லின் இசையுடன் இந்த நிகழ்வு நிறைவடையும், இந்த நிகழ்வானது அனைத்து முப்படையினர்களின் சேவை தொடர்பான நினைவு விழாக்களிலும் முக்கியத்துவம் பெறும் அம்சமாகும். (முற்றும்) Buy Kicks | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp