Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2021 15:15:18 Hours

‘துரு மிதுரு நவ ரடக்’ திட்டத்தின் கீழ் 500 தென்னங் கன்றுகள் விநியோகம்

இராணுவத் தளபதியின் ‘துரு மிதுரு-நவ ரடக்’ திட்ட்டத்தின் கீழ், 5 வது (தொண்) கஜபா படையணியின் படையினர், 72 வது இராணுவ தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி 250 விவசாயக் குடும்பங்களுக்கு 500 தென்னங் கன்றுகளை வழங்கினர்.

இந்நிகழ்வு ஹொரோவபொத்தானையிலுள் ஆலப்பட்டேவ ஸ்ரீ போதிமாலு விகாரையில் நடத்தப்பட்டது. வென் ஆலப்பட்டே விஜிதநாத தேரர், 62 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர, 623 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் 5 வது (தொண்) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் தம்மிக ஹேரத், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.