Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2021 15:04:46 Hours

‘இராணுவத் தளபதி லீக் டி-20’ கிரிக்கெட் இறுதிப் போட்டி ஆரம்பம்

'இராணுவ தளபதி லீக் டி - 20' கிரிக்கெட் போட்டியின் 2 வது கட்டத்தின் இறுதிப் போட்டிகள் ‘கொவிட் – 19 உடன் வாழப் பழகுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் (06) மதியம் தொம்பகொட இராணுவ விளையாட்டு மைதானத்திலுள்ள பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஆலோசனைக்கமைவாக சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொப்கொடவில் ஜூலை 31 ஆம் திகதி ஆரம்பித்து சில நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில், போட்டித்தொடரின் இன்றைய இறுதிப் போட்டி சீக்குகே பிரசன்ன தலைமையிலான “சுப்பர் பெஷன் நொதர்ன் வொரியஸ்” மற்றும் திசர பெரேரா தலைமையிலான இவென்டி டீவி வெஸ்டரன் வொரியஸ் ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இராணுவ கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கிரிக்கெட் சுற்று போட்டிகளில் சுப்பர் பெஷன் அனுசரணையில் இராணுவ தேசிய கிரிக்கெட் அணி வீரர் சீ்க்குகே பிரசன்ன தலைமையிலான “ஆர்மி நொதர்ன் வொரியஸ்” ப்ரிமா ஸடெல்லா மற்றும் Batsman.com இன் இணை அனுசரணையில் இராணுவ தேசிய அணி வீரர் அசேல குணவர்தன தலைமையிலான “ஆர்மி ஈஸ்டன் வொரியஸ்” மற்றும் டிமோ தனியார் நிறுவனத்தின் அனுசரணையில் இராணுவ தேசிய அணி வீரர் தினேஷ் சந்திமால் தலைமையிலான “ஆர்மி சதர்ன் வொரியஸ்” மற்றும் இவெண்ட் டீவியின் அனுசரணையில் திசர பெரேரா தலைமையிலான “ஆர்மி வெஸ்டன் வொரியஸ்” ஆகிய அணிகள் பங்குபற்றின.

மிக விறுவிறுப்பான போட்டிகளுக்கு மத்தியில் சீக்குகே பிரசன்ன தலைமையிலான “சுப்பர் பெஷன் நொதர்ன் வொரியஸ்” மற்றும் திசர பெரேரா தலைமையிலான இவென்டி டீவி வெஸ்டரன் வொரியஸ் ஆகிய அணிகள் இறுதி போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டன. ஒவ்வொரு போட்டியின் போது உரிய சுகாதார ஒழுங்குவிதிகளும் பின்பற்றப்பட்டன.

டி -20 தொடரின் இறுதிப் போட்டியில் இராணுவ தேசிய வீரர் சீக்குகே பிரசன்னா தலைமையிலான சூப்பர் ஃபேஷன் நொதன் வொரியர்ஸ் அணி ஷம்பியன் ஆனதுடன் இராணுவ தேசிய வீரர் திசர பெரேரா தலைமையிலான இவிட்ன் டிவி வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இறுதி போட்டியின் தொடர் நாயகன் மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக சீக்குகே பிரசன்னவும், இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக ஷிஹான் பெர்னாண்டோவும் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக உப்புல் தரங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டிகளை நடத்துவதற்கு உந்து சக்தியாவிருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் இராணுவ பதவி நிலை பிரதானியும் இராணுவ விளையாட்டு குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களும், இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல, இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கோட்டுவேகொட, இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இராணுவ கிரிகெட் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க, பிரதம பதவி நிலை அதிகாரிகள் , இராணுவ கிரிக்கெட் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரதி தலைவருமான மேஜர் ஜெனரல் சிரான் அபேசேகர, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டீ சில்வா, சனத் ஜயசூரிய மற்றும் இலங்கை கிரிகெட் அணியின் செயலாளர் திரு மொஹான் டி சில்வா மற்றும சில சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் போட்டின் வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் ஊக்கவிப்புத் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனுசரணையாளர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கிடையில், 2020 இற்கான இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியியில் சம்பியன்களான தெரிவுசெய்யப்பட்ட இலங்கை இராணுவ பொறியாளர்கள் கிரிக்கெட் அணிக்கான கிண்ணமும் இராணுவத் தளபதியால் வழங்கப்பட்டது.

500 க்கும் மேற்பட்ட தேசிய மட்டத்திலான விளையாட்டு வீரர்களை நிரந்தர பணியாளர்களாகக் கொண்ட இலங்கை இராணுவத்தில் மற்றும் பலர் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுகின்றனர். அதன்படி மேற்படி வளங்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய அமைப்பாக இராணுவம் திகழ்கிறது.

சர்வதேச அளவிலும் நாட்டிற்கு பெருமை மற்றும் கௌரவத்தை கொண்டு வந்து சேர்க்கும் அமைப்பாகவும் பல ஆண்டுகளாக சிறந்த சாதனைகளை தம்வசம் கொண்டுள்ளது. மிக முக்கியமாக, இராணுவ விளையாட்டு வீரர்களில் 99 சதவீதமானோர் கிராமப்புற கிராமங்களில் இருந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடித்து, இந்த போட்டிகள் இடம்பெற்றிருந்ததுடன் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் மட்டுப்படுத்தப்பட்டவர்கள் குழுவினர் மேற்படி போட்டிகளை கண்டுகளித்தனர்.

போட்டியின் நிறைவில் சுப்பர் லீக் போட்டிகள் தொடர்பில் இராணுவ தளபதி தெரிவித்த கருத்து கீழ்வருமாறு