Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2019 15:12:52 Hours

‘அதிஷ்டான பாதயாத்திரை நடைபவனி நிறைவு

இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் இருவரது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அதிஷ்டான பாதயாத்திரை நடைபவனி இம் மாதம் (28) ஆம் திகதி கதிர்காமத்தை நோக்கி வந்தடைந்தது.

இராணுவ கஜபா படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போர் வீர ரான J.B பியதிஸ்ஸ மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெட்டி ஒபிஷர் S.B.S குமார போன்ற விஷேட தேவையுடைய வீரர்களின் பங்களிப்புடன் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி யாழ் நயினாதீவிலிருந்து பாதயாத்திரை நடை பவனியை ஆரம்பித்து வவுனியா, அனுராதபுரம், தம்புள்ளை, கண்டி, ஶ்ரீ பாத, அவிஸ்ஸாவெல, களுத்தறை, காலி, மாத்தறை தங்கல்லை ஊடாக 36 நாட்களில் கதிர்காமத்தை வந்தடைந்தனர்.

இவர்களை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் A.L.P.S திலகரத்ன, இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் W.B.S.M அபேசேகர , இராணுவ உயரதிகாரிகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் வரவேற்றனர்.

பின்னர் இவர்கள் கிரிவெஹெர ஆலயத்திற்கு சென்று கப்புரு பூசையிலும் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ