Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2020 22:49:43 Hours

ஹோமாகம வைத்தியசாலை வளாகத்தினுள் இராணுவத்தினரால் தனமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்கும் பணிகள்

சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரையின் கீழ் 4 ஆவது தொண்டர் பொறியியல் சேவைப் படையணியின் ஒத்துழைப்புடன் ஹோமகாமா அடிப்படை மருத்துவமனையை தனிமைப்படுத்தும் மையமாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரான விஷேட வைத்தியருமான டொக்டர் ஜனிதா ஹெட்டியாரச்சி மற்றும் இராணுவ பொறியியல் சேவை பணியகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ஆர் கனேஹொட அவர்களது கலந்தாலோசனையின் கீழ் இந்த தனிமைப்படுத்தப்படும் மையம் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்டன.

இந்த கட்டிட நிர்மான பணிகள் நிறைவடைந்து 4 ஆவது தொண்டர் பொறியியல் சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பி.என் விஜயசூரிய அவர்களினால் இந்த கட்டிட தொகுதிகள் கடந்த செவ்வாய் கிழமை வைத்திய நிர்வாக குழுவினரிடம் கையளிக்கப்பட்டன. Nike shoes | Sneaker & Lifestyle News