Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2021 10:00:39 Hours

ஹொக்கி மைதானத்தின் பார்வையாளர் மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய பல்லேகலையிலுள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தின் பார்வை மண்டபத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்காக செவ்வாய்க்கிழமை (22) இராணுவ விளையாட்டுத்துறை பணிப்பாளர் பிரிகேடியர் நளீன் பண்டாரநாயக்க அவர்களினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

32 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், இத்திட்டம் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது என்றும், 17 வது இலங்கை பொறியியல் சேவை படையினரால் நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இலங்கை இராணுவ ஹொக்கி குழுவின் செயலாளர் மேஜர் கேஎம்ஜீ அமரநாயக்க, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.