Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ அணியினர் வெற்றி

மிகிந்தளையில் அமைந்துள்ள ரஜரட பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் 6 உறுப்பினர்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்த ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டியானது இம் மாதம் பெப்ரவரி 15-16 வரை ரஜரட பல்கலைகழக ஹொக்கி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பிரபல ஹொக்கி விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்டன.

இந்த சம்பியன்ஷிப் போட்டியின் “ஏ” குழுவில் இராணுவ ஹொக்கி ஆண் அணியினர் வெற்றி சம்பியன்ஷிப்பை சுவிகரித்துக் கொண்டதோடு பிலேட் சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தனதாக்கி கொண்டனர்.

அதேவேளை சம்பியன்ஷிப் போட்டியின் “பி” குழுவில் இராணுவ புலனாய்வு படையணி குழுவினர் சம்பியன்ஷிப்பை சுவிகரித்துக் கொண்டதோடு, இலங்கை பீரங்கி மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொண்டனர். இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி குழுவினர் பிலேட் சம்பியன்ஷிப் போட்டியில் முதலாம் இடத்தை சுவிகரித்துக் கொண்டதோடு கஜபா படையணியினர் இரண்டாம் இடத்தை தனதாக்கி கொண்டனர்.

இந்த போட்டியின் சிறந்த வீரராக லான்ஸ் பொம்படியர் W. V. D டி பெணான்டோவிற்கும் சிறந்த கோல் கீப்பராக லான்ஸ் பொம்படியர் T. K ஹெந்தனியவும் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் இந்த வீரர்களை ஊக்குவிக்கும் நிமித்தம் இலங்கை இராணுவ ஹொக்கி கழகத்தின் தலைவரும், துணைத் தலைவருமான மேஜர் ஜெனரல் டபிள்யூ. ஜி. எச்.ஏ. எஸ். பண்டார அவர்கள் கலந்து கொண்டார். Nike shoes | Air Jordan