Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2021 11:00:47 Hours

ஹைட்ரேஞ்சியா மலர் வளர்ப்பில் இராணுவ பொது சேவைப் படையினர்

முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் (SLAGSC) படையினர் சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரேஞ்சியா மலர் கன்றுகளை தியத்தலாவ படை முகாமில் ஒரு முன்போடி திட்டமாக வளர்க்கத் தொடங்கினர்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களால் முன்மொழியப்பட்ட மலர் வளர்ப்பு திட்டத்திற்கு அமைவாக இந்த பரீட்சார்த்த ஹைட்ரேஞ்சியா மலர் வளர்ப்பு திட்டம் தியத்தலாவ முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் முகாம் வளாகத்தில் தொடங்கப்பட்டது.

இந்த தொடக்க விழா இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் பாலித ஹேவாவாசம் அவர்களின் மேற்பார்வையில் முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சிஎஸ் தேமுனி மற்றும் தியதலாவ முகாமின் அதிகாரி கட்டளை மேஜர் ஆர்எம்டி ரத்நாயக்க ஆகியோரின் பங்குபற்றலில் இடம்பெற்றது.